சோதனை செய்யப்பட்ட மீனாட்சியம்மன் கோவில் லட்டு..! - உணவு பாதுகாப்பு அதிகாரி கூறியது என்ன?

Prasanth Karthick
வியாழன், 26 செப்டம்பர் 2024 (10:41 IST)

திருப்பதி லட்டு விவகாரத்தை தொடர்ந்து பல கோவில்களிலும் பிரசாதத்தின் தரம் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் சோதனை நடைபெற்றுள்ளது.

 

 

திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாத தயாரிப்பில் மாட்டுக் கொழுப்பு பயன்படுத்தப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து பல கோவில்களிலும் பிரசாதம் தயாரிக்கும் முறையை, மூலப்பொருட்களை சோதனை செய்ய அந்தந்த மாநில அரசுகள் உணவு பாதுகாப்பு ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளன.

 

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களின் பிரசாதங்கள் மீது அவ்வாறாக உணவு தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறாக மதுரையில் புகழ்பெற்ற அழகர் கோவில், மீனாட்சி அம்மன் கோவில்களில் பிரசாதம் தயாரிக்கும் உணவுக்கூடத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அழகர் கோவில் நெய் தோசை, மீனாட்சி அம்மன் கோவில் லட்டு ஆகியவை உணவு தர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

 

பின்னர் பேசிய மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராமபாண்டியன், மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் குறித்து பல ஆய்வுகள் செய்துள்ளதாகவும், அவை அனைத்தும் சுத்தமாகவும், தரமாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்