சென்னை வண்ணாரப்பேட்டை 10 ரூபாய் மருத்துவர் உயிரிழப்பு: சோகத்தில் வடசென்னை மக்கள்

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (14:14 IST)
சென்னையில் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து பொதுமக்களுக்கு சேவை செய்த மருத்துவர் கோபால் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த பகுதி மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர் 
 
சென்னை வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்தவர் மருத்துவர் கோபால். இவர் கடந்த பல ஆண்டுகளாக ரூபாய் பத்துக்கு அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மருத்துவம் பார்த்தார். சென்னை ராஜீவ் காந்தி மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக இவர் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
10 ரூபாய்க்கு மிகச் சிறப்பாக மருத்துவம் பார்த்ததால் அவரிடம் அந்த பகுதி மக்கள் சிகிச்சை பெற்று பலனடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட மருத்துவர் கோபால் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது வட சென்னை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த பகுதி மக்கள் அவருடைய மறைவை கேட்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
 
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பத்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த வில்லிவாக்கம் டாக்டர் மோகன் ரெட்டி என்பவர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்