ஆசிரியர்கள் சொத்து விவரங்கள்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு

Webdunia
புதன், 4 செப்டம்பர் 2019 (06:30 IST)
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள் அல்லாதவர்களும் தங்களுடைய சொத்து விபரங்களை தெரிவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஆசிரியர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:  ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும், தங்களிடமுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை பட்டியலிட வேண்டும். 
 
 
சொத்து விவரங்களில் முரண்பாடு இருந்தால், துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்படும். இது குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் பணிபுரிபவர்கள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் சமர்ப்பித்த சொத்து விவரங்களில் தவறு செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
 
ஆசிரியர் பணி என்பது சேவை மனப்பான்மையுடன் செய்யக்கூடிய பணி என்றும், அந்த பணியில் முறைகேடு நடப்பதை அனுமதிக்க முடியாது என்ற நோக்கத்தில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருந்தாலும் இந்த உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்