டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரம் குறைப்பு: முழுவதும் மூடப்படுமா?

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (20:50 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் டாஸ்மாக் கடைகளில் செயல்படும் நேரத்தை குறைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது 
 
தற்போது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மதுக்கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் இனி மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசிடம் அனுமதி கோரப்படும் என்றும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பின் இது குறித்த அறிவிப்பு வெளி வர வாய்ப்பிருப்பதாகவும் டாஸ்மார்க் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
 
ஆனால் அதே நேரத்தில் டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூடவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்