புதிய தேசிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் பட்டப்படிப்புகளுக்கு நுழைவு தேர்வு நடத்துவதற்கு எதிராக தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்த உள்ள தேசிய கல்விக் கொள்கை பல்வேறு எதிர்ப்புகளுக்கு உள்ளாகி வருகிறது. முன்னதாக தேசிய கல்வி கொள்கையில் உள்ள மும்மொழி திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் 12வது முடித்த அனைவருக்குமே பட்டப்படிப்புகளுக்காக தேசிய அளவில் நுழைவு தேர்வு நடைபெறும் என்று தேசிய கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சரியான பரிந்துரை அல்ல என்று தெரிவித்துள்ள தமிழக அரசு இந்த அம்சத்தை கல்வி கொள்கையிலிருந்து நீக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளது.