ஒரு தடவ ஊருக்கு வந்துட்டு போம்மா! – கமலா ஹாரிஸுக்காக காத்திருக்கும் தமிழக கிராமம்!

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2020 (11:22 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற கமலா ஹாரிஸ் வருகைக்காக தமிழக கிராம மக்கள் காத்திருக்கும் செய்தி வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபராக போட்டியிட்டு வென்றுள்ளார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ். தமிழகத்தில் மன்னார்குடியில் உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த கோபாலனின் மகள் வழி பேத்திதான் இந்த கமலா ஹாரிஸ்.

கமலா ஹாரிஸ் தேர்தலில் நிற்பது தெரிந்தது முதலே துளசேந்திரபுரம் மக்கள் அவர் தேர்தலில் வெல்ல வேண்டுமென கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வந்தனர். தற்போது அவர் துணை அதிபராக வெற்றி பெற்றுள்ள நிலையில் துளசேந்திரபுரத்தில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்ட நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் கமலா ஹாரிஸ் வெற்றி தமிழகத்திற்கு பெருமை என வாழ்த்தி ட்வீட் செய்தனர்.

இந்நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் ஒருமுறை துளசேந்திரபுரத்திற்கு வர வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக பூர்வீகமானாலும் இதுவரை ஒருமுறை கூட கமலா ஹாரிஸ் துளசேந்திரபுரம் வந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்