தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிதர போராட்டம்

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (15:42 IST)
கரூர் தாலுக்கா அலுவகம் முன் பல்வேறு கோரிக்கை முன்வைத்து தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் சார்பில் உண்ணாவிதர போராட்டம் நடத்தினர்.



தமிழகத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயணப்படி எம்.டி.ஏ., அடிப்படை ஊதியத்தில் 5 சதவிகிதம் வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் கிராம நிர்வாகஅலுவலர்களுக்கு பணிவரன் முறை மற்றும் தகுதிகள் பருவம் ஆணையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கரூர் தாலுகா அலுவலகம் முன் உண்ணாவிதரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் நாகமணிகண்டன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் அழகிரிசாமி உள்பட 50க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்