தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த தமிழ்நாடு டாஸ்மாக் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த கோரி அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்கள் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
தற்போது தமிழ்நாடு டாஸ்மாக சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் தனசேகரன் கூறியுள்ளதாவது:-
மதுக்கடைகளை மூடி விடுவதால் மட்டும் பூரண மதுவிலக்கு ஏற்படாது எனத் தெரிவித்தார். மது ஆடிமைகளுக்கு கவுன்சிலிங் வழங்கி அவர்களை படிப்படியாக திருத்த வேண்டும். தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமான ஒன்று என்று கூறினார்.