வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி? இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை?

திங்கள், 7 நவம்பர் 2022 (08:59 IST)
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் இன்று தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவக்காற்று தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட வங்க கடலோர மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பொழிந்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 9ம் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றும், நாளையும் தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்