ஒரே நாளில் பொன்னியின் செல்வன் விருந்து & ரஜினி பட பூஜை… இந்தியா வரும் லைகா சுபாஷ்கரன்!

வியாழன், 3 நவம்பர் 2022 (09:13 IST)
பொன்னியின் செல்வன் படத்தின் இமாலய வெற்றியை அடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான மணிரத்னம் படக்குழுவினருக்கு விருந்து அளித்து வருகிறார்.

இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படைப்பான பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்போது வரை படம் சில திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், இதுவரை 450 கோடி ரூபாய்க்கும் மேல் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினருக்கு தனித்தனியாக விருந்து அளித்து வருகிறார் இயக்குனர் மணிரத்னம். பெரும்பாலானவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்ட நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரனுக்கு அவர் நவம்பர் 5 ஆம் தேதி விருந்து வைக்க உள்ளாராம்.

இதற்காக சுபாஷ்கரன் சென்னைக்கு வர உள்ளார். வரும் அவர் இந்த விருந்தில் கலந்துகொள்வதோடு, ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து உருவாகும் படத்தின் பூஜையிலும் கலந்துகொள்ள உள்ளாராம். அந்த பூஜையும் நவம்பர் 5 ஆம் தேதிதான் நடக்க உள்ளது என்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்