வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி? – வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

ஞாயிறு, 6 நவம்பர் 2022 (10:37 IST)
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவக்காற்று தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட வங்க கடலோர மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பொழிந்துள்ளது.

ALSO READ: பொறியியல் படிப்பு: துணை கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு!

இந்நிலையில் எதிர்வரும் 9ம் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைய சாத்தியமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

9ம் தேதி உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடைந்து வடமேற்கே தமிழ்நாடு, புதுச்சேரி கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Edited By Prasanth.k

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்