தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (09:18 IST)
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக பல மாநிலங்களிலும் நல்ல மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்திலும் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இதனால் தமிழகத்தின் நீர்நிலைகள் பல நிரம்பியுள்ளன.

மேலும் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும் புதுச்சேரியின் சில பகுதிகளிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளிலும், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளிலும் மணிக்கு சுமார் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்