புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்துக்கு மழை இல்லை? – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (08:28 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழை அதிகளவு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் “அந்தமானில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று ஆந்திரா நோக்கிதான் செல்கிறது. இந்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இல்லை” எனத் தெரிவித்துள்ளது.

மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சேலம், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்