திமுக கண்டிப்பா கட்டைய போடுவாங்க!? இடைகால பட்ஜெட் எப்படி? – நாளை அமைச்சரவை கூட்டம்!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (11:10 IST)
தமிழக சட்டமன்ற கூட்டம் பிப்ரவரி 2ல் நடைபெறும் நிலையில் நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. அதேசமயம் சட்டமன்ற கூட்டத்தொடர் மற்றும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வது உள்ளிட்ட பணிகளும் உள்ளன. இந்நிலையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் கூட்டப்படுகிறது.

இந்த கூட்டத்தில் சட்டமன்ற கூட்டத்தில் பேச வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் அதுகுறித்தும், திமுகவினர் வேளாண் சட்டங்கள் குறித்தும், ஆளுனரிடம் அளித்த ஊழல் பட்டியல் குறித்தும் கேள்வி எழுப்பினால் அமளி ஏற்படும் என்பதால் அதுகுறித்தும் ஆலோசனை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்