ஊரடங்கை நீட்டிக்க அமைச்சரவை முடிவு! – தளர்வுகள் அளிக்கப்படுமா?

Webdunia
சனி, 2 மே 2020 (14:44 IST)
கொரோனா பாதிப்பின் காரணமாக மூன்றாம் கட்டமாக மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கை தொடர தமிழக அமைச்சரவை குழு முடிவெடுத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரண்டு கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் பாதிப்புகள் குறையாமல் இருப்பதால் மேலும் இரண்டு வாரங்கள் மத்திய அரசு மூன்றாம் கட்ட ஊரடங்கை அறிவித்துள்ளது. கடந்த இரண்டாம் கட்ட ஊரடங்கின்போதே தளர்வுகளை அறிவிக்க மாநில அரசுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தமிழகத்தில் தளர்வுகள் இன்றி ஊரடங்கு செயல்படுத்தப்பட்டது. தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கை செயல்படுத்த தமிழக அமைச்சரவை முடிவெடுத்துள்ள நிலையில் அதை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக பிரித்து செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றாவது கட்டத்தில் தளர்வுகள் வழங்க தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாகவும் தெரிகிறது.

பச்சை மண்டல பகுதிகளிலும், ஆரஞ்சு மண்டல பகுதிகளிலும் நோயின் தீவிரம் பொருட்டு சில தளர்வுகள் வழங்கப்படும் என்றும், சிவப்பு மண்டல பகுதிகளில் எந்த தளர்வும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்