ஆண்கள் vs பெண்கள்: சென்னையில் கொரோனா பாதிப்பு யாருக்கு அதிகம்?

சனி, 2 மே 2020 (13:09 IST)
சென்னையில் கொரோனா பாதிப்பு ஆண்களுக்கே அதிகம் உள்ளதாக புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் நேற்று மட்டும் 203 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    
 
இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2526 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1082 ஆக உயர்ந்துள்ளது.   
 
தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 641 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதில், 558 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் மொத்த எண்ணிக்கையில் சென்னையில் மட்டும் 87% பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  
 
பொதுவாக கொரோனா ஆண்களை அதிகம் தாக்குவதாக உலக அளவிய ஆய்வு தெரிவித்த நிலையில், சென்னையிலும் இதே நிலை நிலவுகிறது. அதாவது தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 63.01% பேரும், பெண்கள் 36.99% பேரும் அடக்கம் என புள்ளி விவரம் ஒன்று வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்