தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதையும் ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. ஏற்கனவே தமிழ்நாட்டில் இன்ப்ளூயன்சா காய்ச்சல் பரவி வரும் நிலையில் கொரோனா பாதிப்பும் அதிகரிக்க தொடங்கியுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழ்நாட்டில் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினசரி பாதிப்புகள் 100ஐ நெருங்கும் நிலையில் பாதிப்புகளை கட்டுப்படுத்துவது குறித்து இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனையில் கொரோனா பரவலை தடுக்கும் முன்னேற்பாடுகள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துதல், மாஸ்க் அணிவது குறித்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.