வங்க கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (13:17 IST)
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல பகுதிகள் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அக்டோபர் 10ம் தேதி மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்