இவ்ளோ பேர் இருக்கீங்க.. என்ன யூஸ்? ஒரு நோபல் இல்ல..! – ராமதாஸ் வருத்தம்!

புதன், 6 அக்டோபர் 2021 (11:15 IST)
இந்தியாவில் பல ஐஐடிகள் இருந்தும் ஒரு நோபல் பரிசு கூட கிடைக்கவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டில் அறிவியலில் சிறந்த பங்களிப்புகளை செய்த அறிவியலாளர்களுக்கான நோபல் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் முதலாக மருத்துவம், இயற்பியல் முதலான பிரிவுகளில் நோபல் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் விஞ்ஞானிகள் வென்றுள்ளனர். இந்தியாவில் 23 ஐஐடிகள், ஓர் ஐ.ஐ.எஸ்.சி, நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்கள் இருந்தும் நோபல் பரிசு வெல்வதற்கான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படாதது ஏன்?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்