புலிகளை காப்பாற்ற Project Tiger திட்டம்! – 8 கோடி ஒதுக்கிய தமிழக அரசு!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (10:49 IST)
தமிழகத்தில் காப்பகத்தில் உள்ள புலிகளின் பாதுகாப்பு பணிகளுக்காக 8 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் தேசிய விலங்கான புலி உலகத்திலேயே மிகவும் அரிதாக காணப்படும் விலங்காகும். இந்தியாவில் மட்டுமே புலிகள் அதிகளவில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வரும் நிலையில் அவற்றை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் ஆனைமலை மற்றும் முதுமலையில் புலிகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள புலிகளை காக்கவும், புலிகள் இனத்தை அதிகரிக்கவும் Project tiger திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு ரூ.2.53 கோடியும், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு ரூ.5.26 கோடியும் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்