மாநில சுயாட்சி உயர்நிலைக் குழு; அரசிடம் இதற்காக சம்பளம் வாங்க மாட்டேன்! - முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்!

Prasanth Karthick

புதன், 16 ஏப்ரல் 2025 (09:32 IST)

மாநில அரசின் உரிமைகளை காக்கும் விதமாக மாநில சுயாட்சி கொள்கையை ஏற்படுத்துவது குறித்த ஆய்வை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

 

இந்த உயநிலைக்குழு மாநில சுயாட்சி குறித்தும், மத்திய - மாநில அரசுகளின் உறவுகள், அதிகாரங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கையை சமர்பிக்க உள்ளது. இந்த முன்னெடுப்பு தமிழக அரசின் சுயாட்சி உரிமைகளை உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தற்போது இந்த உயர்நிலைக்குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் பேசியபோது “ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இந்த பணிக்காக என்ன்னை தேர்வு செய்ததை நான் பெருமையாகவும் கருதுகிறேன். இந்த பணிக்காக தமிழக அரசிடம் இருந்து எந்த ஊதியத்தையும் நான் பெற மாட்டேன் என இதை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒரு வேண்டுகோளாகவே முன்வைத்தேன், அவரும் எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டுள்ளார்” எனக் கூறியுள்ளார்.

 

இந்த மாநில சுயாட்சி குறித்த முன்னெடுப்பின் மூலம் கல்வியை தேசிய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர முடியுமா? அதன் மூலம் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட திமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்