இன்று தொடங்குகிறது +2 தேர்வுகள்: தயாராகும் மாணவர்கள்!

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (09:10 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 7,276 பள்ளிகளை சேர்ந்த 8,16,359 மாணவர்கள் மற்றும் தனித்தேர்வு எழுதும் 19,166 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது.

பொதுத்தேர்வில் வகுப்பறை கண்காணிப்பு பணியில் 42 ஆயிரம் ஆசிரியர்களும், முறைகேடுகளை தடுக்க 4000 பறக்கும் படையினரும் ஈடுபட்டுள்ளனர். மார்ச் 24ல் முடிவடையும் இந்த தேர்வுகளின் முடிவுகள் ஏப்ரல் 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வில் முறைகேடு செய்பவர்களுக்கான தண்டனைகளையும் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி துண்டு சீட்டு, விடை குறிப்புகல் வைத்திருந்தால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும். காப்பி அடித்தால் தேர்வு எழுத இரண்டு ஆண்டுகள் தடையும், வினாத்தாளை வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் தடையும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்