தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம்: இன்று முதல் அமல்

Webdunia
திங்கள், 17 ஜூன் 2019 (08:32 IST)
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை ஒருசில நாட்கள் கடுமையாக கடைபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கிவிட்டது
 
இந்த நிலையில் இன்று முதல் பிளாஸ்டிக்கை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் யாராக இருந்தாலும் அதாவது வியாபாரியாக இருந்தாலும் பொதுமக்களாக இருந்தாலும் அவர்களிடம் அபாரதம் வசூலிக்கப்படும் என்றும் அபராத தொகை அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
வியாபாரிகளை பொருத்தவரை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள், சேமித்து வைப்பவர்கள், வணிக ரீதியாக பயன்படுத்தும் பெரிய கடைக்காரர்கள், சிறிய கடைக்காரர்கள் என பிரிக்கப்பட்டு பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிளாஸ்டிக் பொருட்களை முதல் முறை பயன்படுத்தி பிடிப்பட்டால் ரூ25 ஆயிரம், இரண்டாவது முறை பிடிப்பட்டால் ரூ.50 ஆயிரம், மூன்றாவது முறை பிடிப்பட்டால் ரூ. 1 லட்ச அபராதமாக விதிக்கப்படவுள்ளது. அதற்கு மேலும் பிடிபட்டால், விற்பனையாளரின் கடை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது
 
கடைகள் மட்டுமின்றி வீடுகளிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் உண்டு.  அதிகாரிகள் வீடுகளில் சோதனை செய்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதை கண்டுபிடித்தால் முதல்முறை ரூ.500 அபராதமும் அடுத்த முறை ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்