பிளாஸ்டிக் ஆதிக்கத்தில் இருந்து பசுமைச்சூழலை நோக்கி...! மக்களைக் கவரும் பிரம்பு பொருட்கள்...
செவ்வாய், 14 மே 2019 (14:21 IST)
பிரம்பை பொருட்கள் தயாரிப்பினால் ஆயுள்காலமும் நீளும் கரூரில் சிறப்பாக தயாராகும் அஸ்ஸாம் மாநில பிரம்பு பொருட்கள்.
தமிழகத்தில் ஆங்காங்கே சாலையோரங்களில் அலங்கரிக்கும் வகையில் ஆங்காங்கே பிரம்பு பொருட்கள் பலவகைகளாக செய்யப்பட்டு பார்வையாளர்களை கண் குளிர வைப்பதோடு, தற்போது ஆங்காங்கே பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யும் விதத்தில் பிரம்பை பொருட்கள் பெருமளவில் தயாராகின்றது.
கரூரிலிருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வடிவேல் நகர் பகுதியில். இரு நபர்கள் ஒன்றிணைந்து இந்த மக்கள் பிரம்பு மூலம் கைவினை பொருட்கள் செய்வதில் சிறந்து விளங்குகின்றனர். பிரம்பு மூலம் இங்கு ஊஞ்சல், சோபாசெட், குழந்தைகளுக்கான ஊஞ்சல் மற்றும் நாற்காலிகள், டைனிங் டேபிள், கட்டில், அலமாரி, பீரோ, அரிசி கூடை, அர்ச்சனை கூடை, பழ கூடை, அலங்காரகூடை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளவர்கள் அணிந்து கொள்ளும் தொப்பி ஆகியவைகளை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதற்கான பிரம்புகளை அஸ்ஸாம் பகுதிகளிலிருந்தும், இந்தோனிஷியா பகுதிகளில் இருந்தும் ஏஜெண்டுகள் மூலம் வாங்குகின்றனர் . கரூர் மற்றும் ஈரோட்டில் மட்டும் சுமார் 20 க்கும் மேற்பட்ட பிரம்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பிரம்பு பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மூங்கில்பிரம்பு, அந்தமான்பிரம்பு, ரைடான், ஜாதி என்ற 4 வகை பிரம்புகள் இருக்கும் நிலையில், ஒட்டையே இல்லாத, அஸ்ஸாம் பிரம்புகளும், அதை பின்ன இந்தோனிஷியா பகுதிகளை சார்ந்த வெள்ளை பிரம்பைகளும் பயன்படுத்தி கைவினை பொருட்களை செய்கின்றனர்.
இங்கு செய்யப்படுகின்ற பிரம்பு பொருட்கள் கோவை, சென்னை, வேலூர், ஒசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளில் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து பிரம்பு தொழிலில் காலம் காலமாக ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் குடும்பங்கள் இத்தொழிலை வைத்துதான் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
குடிசைத்தொழிலாக அங்கீகரிக்கப்பட்ட இந்த பிரம்பு தொழில் மூலம் தயாரிக்கப்படும் பிரம்பை உபகரணங்கள் ரூ ஆயிரம் முதல் ரூ 15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து வெயில் காலம் அதிகரித்து வரும் வெயிலினாலும், பிரம்பை களால் ஆண ஷோபா, கட்டில், தொட்டிகள் ஆகியவற்றில் படுத்தால் நன்கு இருக்கும் என்றும், மூலிகை குணம் மிக்கது என்றும், ஆயுள் காலம் அதிகரிக்கும் என்பதினாலும் இந்த பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் பிரம்பைகளை வாங்கி செல்கின்றனர்.
மேலும், பிரம்பைகள் குறித்து பொதுமக்களிடம் மேலும், விழிப்புணர்வு வந்தால் மட்டுமே பிரம்பை தொழில் சூடுபிடிக்கும் என்பது அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் கருத்து, இருப்பினும் பிரம்பை உபகரணங்கள் குறித்து தெரிந்து சில மக்கள் தினந்தோறும் வாங்கியும் செல்கின்றனர்.