தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய தலைவர் நியமனம் !

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (15:51 IST)
tnpsc

தமிழ்நாடு  அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக  ஐஏஎஸ் அதிகாரி கா. பாலச்சந்திரன் பொறுப்பேற்றுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலச்ந்திரன், ஐஏஎஸ் அதிகாரியாக தமிழ்நாடு பிரிவில் நியமிக்கப்பட்டார்.

இவர், ஈரோடு,விழுப்புரம் ஆகிய மாவடங்களில் ஆட்சியாளராக பணியாற்றியுள்ளார்.

மேலும், இவர் கடந்த இரு ஆண்டுகளாக வணிகவரி மற்றும் பதிவுத்துறையில், முதன்மை செயலாளராகப் பணியாற்றி வந்த நிலையில், இன்று, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், இருமுறை தமிழக அரசின் நல்லாளுமை விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்