தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தன்னார்வலர்கள் பலர் உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கி உதவி வருகின்றனர். இந்நிலையில் தன்னார்வலர்கள் உணவு வழங்கும்போது சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என புகார்கள் எழுந்ததால் தன்னிச்சையாக தன்னார்வலர்கள் செயல்பட அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து பல்வேறு சமூக அமைப்புகள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன. இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து ” அரசு மட்டும்தான் அருள் செய்ய வேண்டுமென்றால் அறமென்பதெதற்காக? ஆணிவேர் மட்டும்தான் நீர் வழங்க வேண்டுமென்றால் பக்க வேர்கள் எதற்காக?” என கேள்வி எழுப்பியுள்ளார்.