கொரோனாவில் இருந்து குணமானவருக்கு இப்படி ஒரு சிக்கலா?

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (15:35 IST)
கொரோனாவாவில் இருந்து குணமானாலும் மக்களின் ஒதுக்குதலால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனாவில் குணமான நோயாளிகள்.

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9000 ஐ தாண்டியுள்ளது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 300 ஐ நெருங்க, சிகிச்சையில் குணமானவர்களின் எண்ணிக்கை 800 ஆக உள்ளது. கொரோனாவுக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமானாலும்  பலரும் தன்னை சுற்றி உள்ளவர்களின் ஒதுக்கலால் நோயாளிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியைச் சேர்ந்த இளைஞர், கரோனா பாதித்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். ஆனால் அவரது அக்கம்பக்கத்தினர், அவரின் குடும்பத்தினர் நடந்து சென்ற பாதையைக் கூட பயன்படுத்துவதில்லை எனவும் புரளிகளைக் கிளப்பி தங்கள் வீட்டுப் பால்காரரைக் கூட பால் ஊற்றவிடாமல் தவிர்த்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா எனும் கொடிய கிருமியில் இருந்து தப்பித்தாலும் மக்களின் அறியாமை எனும் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் குணமான நோயாளிகள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்