தமிழகத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு சதவீதம்? – தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (13:03 IST)
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

கடந்த 6ம் தேதி பரபரப்பாக வாக்குப்பதிவு நடந்த நிலையில் சில பகுதிகளில் பல்வேறு காரணங்களால் மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்த சம்பவங்களும் நடந்தன. இந்நிலையில் தற்போது முதற்கட்ட வாக்குப்பதிவில் பதிவான மொத்த வாக்கு எண்ணிக்கையை தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 9 மாவட்டங்களிலும் மொத்தமாக 77.43% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்