ஆட்டோவில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வெள்ளி, 8 அக்டோபர் 2021 (11:54 IST)
ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் ஆட்டோக்களை பயன்படுத்த உள்ளதாக விழுப்புரம் ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மக்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்த பரிசு திட்டங்களையும் அறிவித்து வருகிறார்கள்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 5வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் ஆட்சியர் மோகன் மக்களுக்கு அவர்கள் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்க ஆட்டோக்களில் முகாம் அமைப்பது என அறிவித்துள்ளார். இதற்காக 300 ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் முகாம்களுக்கு செல்லாத மக்களுக்கும் தடுப்பூசி போட இந்த திட்டம் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்