தமிழ்நாட்டில் கனமழை; 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! – இந்திய வானிலை ஆய்வு மையம்!

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (09:53 IST)
தென்மேற்கு பருவமழை தொடர்ந்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டிலும் சில பகுதிகளில் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டிலும் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக கன்னியாக்குமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சில பகுதிகளில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழக மாவட்டங்கள் சிலவற்றி கனமழைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது. அதன்படி திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்