மத்திய அரசின் பாரத் நெட் திட்டம் மூலமாக தமிழக கிராமங்களுக்கு இணைய சேவை வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துள்ள நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சியை கிராமங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் கிராமங்களுக்கு இணைய சேவை வழங்க மத்திய அரசு பாரத் நெட் திட்டத்தை அறிவித்தது.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள 12,525 கிராமங்களுக்கு இணைய வசதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ரூ.1,815 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.