தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் கூட்டணி குறித்த தனது நிலைப்பாட்டை வெளியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணி குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்று கூட்டணி குறித்த நிலைப்பாட்டை விஜய் தீர்மானமாக வாசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய் தனித்துப் போட்டியிடுவாரா அல்லது தனி கூட்டணி அமைத்துப் போட்டியிடுவாரா அல்லது அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் சேருவாரா என்பதற்கு இன்று பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.