காதலியை கொன்று போர்வையில் சுற்றி பிணத்தை வீசியெறிந்த காதலன்.. அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran

வெள்ளி, 4 ஜூலை 2025 (11:57 IST)
வாரணாசியில் 22 வயது இளம்கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலனால் கொலை செய்யப்பட்டு, அவரது பிணம் போர்வையில் சுற்றப்பட்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அல்கா பிந்த் என்ற அந்த கல்லூரி மாணவி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அல்கா தனது காதலனை சந்தித்தது தெரிய வந்தது.
 
இதனை அடுத்து, சஹாப் பிந்த் என்ற அவரது காதலனை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், தான் அல்காவை காதலித்ததாகவும், ஆனால் அவர் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதாலும், தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததாலும் ஆத்திரமடைந்து அல்காவை கொலை செய்ததாகவும் சஹாப் பிந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
மேலும், தனது காதலியை தனது அறைக்கு நைசாக பேசி அழைத்து வந்ததாகவும், அங்கு அவரது கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, அல்காவின் பிணத்தை ஒரு போர்வையில் சுற்றி வீசி எறிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் வாரணாசி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் சஹாப் பிந்திடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்