ஆப்ரிக்க பெண்ணை மணந்த தமிழர்

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (23:41 IST)
ஆப்ரிக்க நாடான கேமரூன் பெண்ணை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இன்று காதல் திருமணம் செய்து கொண்டார்.
 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் முத்துமாரியப்பன். இவர் கடந்த 8 வருடங்களாக மேற்கு ஆப்பிரிக்க நாடான கேம்ரூனில் உள்ள ஒரு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் சி.என்.சி. மெசின் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்துள்ளார்.
 
அதே நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றிய வால்மி இனாங்கா மொசொக்கேவை காதலித்து வந்துள்ளார். இருவரும் தங்களின் காதலை அவரவர் குடும்பத்திடம் தெரிவிக்க இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.
 
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த வால்மி இனாங்கா மொசொக்கே இந்தியாவிற்கு வந்து, இந்து முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என தனது விருப்பத்தை அவரது வீட்டில் தெரிவித்துள்ளார். இதற்கு அவரது தாயாரும் உறவினர்களும் சம்மதம் தெரிவித்தனர்.
 
இதையடுத்து உறவினர்கள் 10 பேருடன் இந்தியா வந்தனர். கோவை துடியலூர் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் கிறித்தவ முறைப்படியும் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்