சென்னையில் இன்று வெயில் உக்கிரமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வந்தது என்பது குறிப்பாக வங்க கடலில் தோன்றிய புயல் காரணமாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் புயல் கரையை கடந்து விட்ட நிலையில் தற்போது மீண்டும் சுட்டரிக்கும் வெயில் கொளுத்தி வருவது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை செய்து உள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று அதிக அளவு வெப்பம் பதிவானதாகவும் இன்றும் அதே போல் அதிக அளவு வெப்பம் பதிவாகும் என்றும் இதில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்னும் சில நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்று கூறியிருந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் அதையே கூறி இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.