வரும் 30 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை!

Webdunia
புதன், 26 ஜனவரி 2022 (12:02 IST)
தமிழகத்தில் வரும் 30 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதலாக தென்னிந்திய மாநிலங்களில் கனமழை பெய்தது. முக்கியமாக தமிழகத்தில் அதிகளவு மழை பெய்தது. அதீத கனமழையால் சென்னையில் குடியிருப்புகள் நீரில் மூழ்கிய நிலையில், டெல்டா பகுதிகளில் வயல்கள் நீரில் மூழ்கியதால் விவசாயம் பாதிக்கப்பட்டது. அதீத கனமழையால் தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.
 
முன்னதால இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி வடகிழக்கு பருவமழையால் தென்னிந்தியாவில் 579.1 மி.மீ அளவிற்கு மழைப்பொழிவு பதிவாகியது எனவும் 1901ம் ஆண்டிற்கு பிறகு தென்னிந்தியாவில் அதிக அளவில் பதிவான மழை அளவு இது எனவும் தெரிவித்தது. 
 
இந்நிலையில் தமிழகத்தில் வரும் 30 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்எனவும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்