இந்தியாவுலேயே தமிழ்நாட்டு போலீஸ் தான் கெத்து..

Arun Prasath
வெள்ளி, 8 நவம்பர் 2019 (10:22 IST)
இந்தியாவிலேயே தமிழக காவல் துறை தான் சிறப்பாக பணியாற்றுவதாக 2019 ஆம் ஆண்டிற்கான இந்திய நீதி அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

காவல், தடயவியல், நீதிமன்றம் உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆண்டுதோறும் நீதி அறிக்கை வெளியிடப்படுகிறது. அதன் படி சிறப்பாக பணியாற்றுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு காவல்துறை முதலிடம் வகித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் நீதி வழங்குவதில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதலிடத்தை மஹாராஷ்டிரா மாநிலமும், கடைசி இடத்தை பீகார் மாநிலமும் தக்கவைத்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்