ஏப்.16ல் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி: காவல்துறை அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (12:48 IST)
ஆர்எஸ்எஸ்  அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை அடுத்து தமிழக காவல்துறை ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளித்துள்ளது

தமிழ்நாட்டில் ஏப்ரல் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

 உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை அடுத்து ஆர்எஸ்எஸ் அனுமதி கேட்ட 45 இடங்களுக்கும் தமிழக காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஏப்ரல் 16ஆம் தேதி திட்டமிட்டபடி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் அந்த தீர்ப்பில் ஆர்எஸ்எஸ்  அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்