7 நாள் தனிமை யார் யாருக்கு பொருந்தும்? தமிழக அரசு புது அறிவிப்பு!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (08:35 IST)
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைய தொடங்கியது. தற்போது தமிழகத்தில் தினமும் 400 - 500 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000 தாண்டி வருகிறது. நேற்று ஒரே நாளில் 8,800 பேருக்கு மகாராஷ்டிராவில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
அதேபோல கேரளாவில் 4,106 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது... 
 
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா அறிகுறி தென்பட்டால் பரிசோதனை செய்ய வேண்டும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்