தீபாவளியை முன்னிட்டு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை என தமிழக அரசு சற்று முன் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாட இருக்கின்ற நிலையில், நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. எனவே அக்டோபர் 31 முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை விடுமுறை என்பதால், சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு நான்கு நாள் விடுமுறை கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இதன் தொடர்ச்சியாக புதுவையில் அக்டோபர் 30ஆம் தேதியும் விடுமுறை என அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலும் அதே போன்ற அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதனிடையே சற்று முன் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாளை அதாவது அக்டோபர் 30ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் முற்பகல் மட்டும் செயல்படும் என்றும் பிற்பகல் அரை நாள் விடுமுறை என்றும் அறிவித்துள்ளது. இதனால் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்கள் நாளை பிற்பகலே செல்ல ஆரம்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.