பூமிக்கு திரும்ப முடியாத நிலை! விண்வெளியில் இருந்து தீபாவளி வாழ்த்து சொன்ன சுனிதா வில்லியம்ஸ்!

Prasanth Karthick

செவ்வாய், 29 அக்டோபர் 2024 (10:43 IST)

விண்வெளி பயணம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப முடியாத நிலையில் உலக மக்களுக்கு விண்வெளியில் இருந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

 

 

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மூலம் விண்வெளிக்கு பலமுறை பயணித்துள்ளார். கடந்த ஜூன் 5 அன்று சுனிதா வில்லியம்ஸும், பட்ச் வில்மோரும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சில நாட்கள் பணிகள் தொடர்பாக சென்றிருந்தனர். அதன்பின்னர் அவர்களை அழைக்க போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் அனுப்பப்பட்ட நிலையில் அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வீரர்களை அழைக்காமலே விண்கலம் பூமிக்கு திரும்பியது.

 

இதனால் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு அழைக்கப்படுவது அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பூமியிலிருந்து 260 மைல்களுக்கு அப்பால் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், அங்கிருந்து பூமியில் உள்ள அனைத்து மக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு இந்த முறை பூமியிலிருந்து இவ்வளவு தொலைவில் தீபாவளி கொண்டாடு வாய்ப்பு அமைந்திருப்பதாக அவர் பேசியுள்ளார்.


ALSO READ: ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த போகும் பிரதமர் மோடி! இந்தியாவில் வைத்து பேச்சுவார்த்தை?
 

விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்த தீபாவளி வாழ்த்துக்கு ரிப்ளை செய்து வரும் பலரும் அவருக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளதோடு, அவர் பூரண நலத்துடன் பூமிக்கு திரும்ப வேண்டும் என வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

#Diwali2024 | #SunitaWilliams

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்@DDNewslive @pibchennai pic.twitter.com/aP6vg2az9m

— DD Tamil News (@DDTamilNews) October 29, 2024

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்