முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை.. அமைச்சர் துரைமுருகன் தகவல்..!

Mahendran

வியாழன், 24 ஜூலை 2025 (11:11 IST)
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் அவருக்கு எந்த அடைப்பும் இல்லை என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏற்பட்டதையடுத்து, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டு, மூன்று நாட்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. இருப்பினும், அவர் மருத்துவமனையில் இருந்தபடியே அரசு பணிகளைக் கவனித்ததாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாக இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் உறுதிப்படுத்தினார். மேலும், ஆஞ்சியோ பரிசோதனை முடிவில் முதல்வருக்கு எந்தவித அடைப்பும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
 
விரைவில் முதலமைச்சர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்