கரூரில் நடந்த கூட்டநெரிசல் பலி தொடர்பாக விஜய் கைது செய்யப்படலாம் என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கரூரில் இன்று தவெக விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் மூச்சி திணறில் பலியானார்கள். இதுவரை 36 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் விரைந்துள்ளார்.
இந்நிலையில் தவெக அனுமதி கேட்ட நேரத்தில் பேசாமல், காவல்துறையின் கட்டுப்பாடுகளை மதிக்காமல் செயல்பட்டதே உயிரிழப்புகளுக்கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள தனி ஆணையம் அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து இனி வரும் நாட்களில் விஜய்யின் பிரச்சார பயணத்திற்கு காவல்துறை முழுவதும் தடை விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மறுபுறம் பிரச்சாரத்தை விஜய்யே ரத்து செய்து அறிவிப்பை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க தவெக தலைவர் விஜய் மீது இந்த உயிரிழப்பு சம்பவங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாகவும், BNS பிரிவு 105ன் கீழ் கூட்டத்தை முறையாக நிர்வகிக்கத் தவறியமை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக தவெக நிர்வாகிகள் மற்றும் விஜய்யுமே கூட கைது செய்யப்படலாம் என பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளது.
Edit by Prasanth.K