வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 229 புள்ளிகள் சரிந்து 82,496 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல், தேசியப் பங்குச்சந்தையின் நிஃப்டி 53 புள்ளிகள் சரிந்து 25,165 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய வர்த்தகத்தில், அப்போலோ ஹாஸ்பிடல், பாரதி ஏர்டெல், சிப்லா, டாக்டர் ரெட்டி, இண்டஸ்இண்ட் வங்கி, ஜியோ பைனான்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மாருதி, ஓஎன்ஜிசி, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
மறுபுறம், டிசிஎஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிசி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹெச்டிஎஃப்சி வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், பஜாஜ் பைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.