விஜய் பிரச்சாரத்தில் துயரம்! கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலி! - கண்ணீரில் கரூர்!

Prasanth K

சனி, 27 செப்டம்பர் 2025 (22:38 IST)

கரூரில் இன்று விஜய் பிரச்சாரத்திற்கு சென்ற நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நாமக்கல், கரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாமக்கலில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கரூர் சென்றார். கரூரில் இரவில் விஜய் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட பின்னர் கூட்டம் கலைந்து செல்ல முயன்றபோது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

 

இந்த கூட்ட நெரிசலில் 50க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். முதலில் 2 பேர் சிகிச்சை பலனின்றி பலியானதாக சொல்லப்பட்ட நிலையில் நேரமாக ஆக பலி எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

 

தற்போதைய நிலவரப்படி, 8 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 36 பேர் பலியானதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் விஜய் திருச்சி சென்று விமானத்தில் ஏறி சென்னை சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்