துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ள நிலையில் பதவிக்காலத்தின் பாதியில் ராஜினாமா செய்ததால் ஓய்வூதிய பலன்கள் கிடைக்குமா? என்ற கேள்விக்கு ஆம், கிடைக்கும் என்ற பதிலை சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு துணை குடியரசுத் தலைவர் இரண்டு ஆண்டுகள் பதவி வகித்த பிறகு ஓய்வு பெற்றால், அவருக்கு ஓய்வூதியம் மற்றும் பிற வசதிகள் வழங்கப்படும். எனவே, தன்கருக்கு ஓய்வூதிய பலன்கள் கண்டிப்பாக கிடைக்கும்.
வாழ்நாள் முழுவதும் இந்தியாவில் எந்த இடத்திலும், தனது விருப்பப்படி ஒரு நிலையான குடியிருப்பில் வாடகை இல்லாமல், தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணம் இல்லாமல் அவர் வீட்டை பயன்படுத்தி கொள்ளலாம்.
தனது மனைவி அல்லது ஒரு துணை அல்லது உறவினருடன், "இந்தியாவில் எங்கும் இலவசமாக, விமானம், ரயில் அல்லது கப்பல் மூலம் மிக உயர்ந்த வகுப்பில்" பயணம் செய்யலாம்.