தமிழக பாஜக சிறுபான்மை அணி மாநில துணைத்தலைவர் ஏ ஆர் பாட்ஷா திடீர் ராஜினாமா!

J.Durai
திங்கள், 28 அக்டோபர் 2024 (10:38 IST)
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி மாநில துணைத்தலைவர் திருச்சி ஏ ஆர் பாஷா.
இவர் பாரதிய ஜனதா கட்சியின் தவிர்க்க முடியாத இளைஞர் சக்தியில் ஒருவராக திகழ்ந்தார். 
 
சமூக ஊடகங்களிலும் செய்தி தொலைக்காட்சிகளிலும் இவருடைய அனல் பறக்கும் பேட்டிகள் மிகவும் பிரபலம்.
 
இவருடைய அதிரடியான அரசியலுக்காகவும் இவர் செய்யக்கூடிய பொது நலன் சார்ந்த செயல்களுக்காகவும் இவரை பின்பற்றும் இளைஞர்கள் ஏராளம். பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவை பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக மாற்றியதில் இவரின் பங்கும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
 
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்ட பொழுது அன்றிலிருந்து தொடங்கிய இவரது வேகம் இன்று வரை எந்த இடத்திலும் தடைபடாமல் விறுவிறுப்பாகவே செயலாற்றிக் கொண்டு இருந்தது.
 
திருச்சியில் திரும்பிய இடமெல்லாம் பாரதிய ஜனதா கட்சியின் பிளக்ஸ் பேனர்களும் சுவர் விளம்பரங்களும் இருக்கின்றது என்றால் அதில் ஏ ஆர் பாஷாவின் பங்கும் மிக மிக முக்கியமான ஒன்றாகும்.
 
திருச்சி மாவட்டத்தில் பாஜகவில் திமுகவை எதிர்த்து குரல் கொடுக்கக்கூடிய ஒரு சிலரின் ஏ ஆர் பாஷாவின் குரல் என்றைக்குமே ஓங்கி ஒலிக்கும். 
 
இவர் வசிக்கும் பகுதியான தென்னூர் ஏரியாவில் திமுக மிகவும் பலம் வாய்ந்த இடத்தில் இருக்கும் பொழுதும் இவர் சார்ந்த இவருடைய சமூகத்திலேயே இவருக்கு பல எதிர்ப்புகள் எழுந்த பொழுதும் அத்தனையும் தவிடு பொடியாக்கி அவர் சார்ந்த சமூக மக்களிடம் பாஜகவின் மீது அளப்பரிய மதிப்பையும் அன்பையும் உருவாக்கி பல இஸ்லாமிய சகோதரர்களை பாஜகவின் பால் கொண்டு வந்தவர் தான் இந்த ஏ ஆர் பாஷா.
 
இன்று இவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் அவர்களுக்கும் சமர்ப்பித்துள்ளதாக செய்தியாளர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்