அண்ணாமலையின் சொத்து மதிப்பு எவ்வளவு? வெளியான தகவல்

Sinoj

புதன், 27 மார்ச் 2024 (16:44 IST)
தமிழகத்தில் மக்களவை தேர்தல் தேதி ( ஏப்ரல் 19 )அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்துக் கட்சிகளும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில்,  தமிழ் நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளனர்.
 
 பல கட்டங்களாக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகி வருகிறது.
 
சமீபத்தில் பாஜக வெளியிட்ட தமிக்ழக வேட்பாளர் பட்டியலில்  மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாத பல கட்சி வேட்பாளர்களும்,  நட்சத்திர வேட்பாளர்களும் இறுதி நாளான இன்று வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
 
இந்த நிலையில், இன்று அண்ணாமலையில் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
 
அதில்,  அசையும் சொத்து ரூ.36 லட்சமும், அசையா சொத்து ரூ.1.12 கோடி இருப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அண்ணாமலையில் மனைவி அகிலாவின் பெயரில் ரூ.2 கோடி மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ.53 அட்சம் அசையா சொத்தும் இருப்பதாக தகவல் வெளியாகிறது.
 
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாக அண்னாமலை சமீபத்தில் ‘என் மண் என் மக்கள்’ பயணத்தின்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்