2021ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பேரறிஞர் அண்ணா விருது நாஞ்சில் சம்பத்துக்கு, சிங்காரவேலர் விருது கவிஞர் மதுக்கூர் ராமலிங்கத்துக்கு வழங்கப்படவுள்ளது.
மேலும் மகாகவி பாரதியார் விருது பாரதி கிருஷ்ணகுமாருக்கு, பாவேந்தர் பாரதிதாசன் விருது புலவர் செந்தலை கவுதமனுக்கு வழங்கப்படவுள்ளது.
கம்பர் விருது பாரதி பாஸ்கருக்கு, கி. ஆ. பெ. விருது முனைவர் ம.ராசேந்திரனுக்கு, இளங்கோவடிகள் விருது நெல்லை கண்ணன், அயோதிதாசப் பண்டிதர் விருது - ஞான. அலாய்சியஸ்-க்கு வழங்கப்படவுள்ளது.