6-8-ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (11:06 IST)
6-8-ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே அரசு பள்ளிகளில் படித்து வரும் 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. அந்த லேப்டாப்கள் மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் 
 
தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புகளுக்கு இன்னும் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் வகுப்புகளையும் கவனிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இந்த டேப் பேருதவியாக இருக்கும் என கருதப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்